- Advertisement -
Homeபொழுதுபோக்குதிமுகவின் செல்வாக்கை விஜயால் அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை, ஆளுங்கட்சியை அச்சப்பட வைத்த உடன்பிறப்புகளுக்கு நன்றி -...

திமுகவின் செல்வாக்கை விஜயால் அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை, ஆளுங்கட்சியை அச்சப்பட வைத்த உடன்பிறப்புகளுக்கு நன்றி – திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதம்!

- Advertisement -

முன்னாள் முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை. கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும் அனைத்தையும் மீறி, எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை. இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்.

அவைதான் பெரும்பான்மை. இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள், அருவருப்பான பேச்சுகள், அசிங்கமான சைகைகள், ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை – இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். களத்தில் கடும் போட்டியைக் கொடுத்து, ஆளும்கட்சியினரை அச்சத்தில் அலையவிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நிர்வாகிகள் தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம்.

தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள் என்று அந்த பதிவில் முக ஸ்டாலின் கூறியிருக்கிறார். இந்த தேர்தலை பொருத்த வரை எதிர்கட்சிகள் பெற்ற அனைத்து ஓட்டுகளுமே ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் வெறுப்பான ஓட்டுகளாக தான் பதிவாகி இருக்கின்றன என்பதை ஸ்டாலின் இந்த பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

சற்று முன்