சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் 2 படம் வருகிற 15ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் சுராஜ் வெஞ்சரமூடு யோகிபாபு வித்யாபாலன் கௌரவ வேடத்தில் மோகன்லால் சிவராஜ்குமார் மிதுன் சக்ரவர்த்தி விஜய் சேதுபதி ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தில் பிரதான வில்லனாக நடிகர் எஸ்ஜே சூர்யா நடித்திருக்கிறார்.
ஜெயிலர் 2 படத்தின் சூப்பர் ஷோ பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பேசியதாவது, சினிமாவில் நடிப்பதை நான் ரொம்பவும் விரும்புகிறேன். ரொம்ப ரொம்ப லைக் பண்றேன். ஆனால் அதை விட ஜாஸ்தியாக நான் கண்டக்டர் வேலையை லைக் பண்ணினேன்.
அந்த 5 ஆண்டுகள் நான் அந்த கண்டக்டர் வேலையை அந்த மாதிரி லைக் பண்ணினேன். இப்பக்கூட நினைச்சு பார்க்கறேன். அந்த கண்டக்டர் வேலையை மிஸ் பண்றேன். அதனால் எனக்கு ஆழமாக மனசுக்குள் நான் கண்டக்டர் என்பது ஆழமாக பதிந்து விட்டது.
என் மனசுக்குள் அதுதான் நிரந்தமாக இருக்குது. இது எல்லாம் அப்படியே வந்துட்டு வந்துட்டு போற மாதிரி இருக்குது. என்னால் சிவாஜி ராவ் சூப்பர் ஸ்டார் ஆனதை பெருசா எடுத்துக்க முடியலே. என்னால மறக்க முடியலே. அதனால் அப்பப்போ பெங்களூருக்கு போயிடுவேன்.
அப்பப்போ போய் அந்த பஸ்சை பார்த்துட்டு இருக்கும் போது மனசுக்குள்ள ஒரு சந்தோஷம். இப்பக்கூட பெங்களூரு போயிருந்தேன். அந்த கண்டக்டர் யூனிஃபார்ம் காக்கி டிரஸ் பார்த்தாலே எனக்குள்ள ஒரு ஈர்ப்பு வரும். அந்த ஐடென்டிபை மறக்க முடியலே. நான் பஸ் கண்டக்டர்.
நான் பஸ் கண்டக்டர் என்றால் உங்க மாதிரி பெரிய டைரக்டர் கிட்ட எப்படி இருப்பாங்க? எப்படி பணிவா நடந்துப்பாங்க? அப்படிதான் நான் இருக்கிறேன் என்று ரஜினிகாந்த் அந்த மேடையில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக 76 வயதிலும் ஹீரோவாக நடித்து வரும் ரஜினிகாந்த் இன்றும் நான் ஒரு சாதாரண பஸ் கண்டக்டர்தான். அப்படிதான் நினைத்துக்கொள்கிறேன் என்று கூறிய வார்த்தைகள் தமிழ் சினிமா ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது.





