- Advertisement -
பத்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய அந்த படத்தின் இயக்குனர் பாலாஜி தாரணிதரன் கூறியதாவது, சீதக்காதி படத்தில் செய்த தவறுகளை பத்தா படம் செய்யும்போது திருத்திக் கொண்டேன். 2012ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஹிட் கூட கொடுக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தது உண்மைதான். பணம் சம்பாதிக்கவில்லையே என்று ஏக்கம் ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் பிழைக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயம் இருந்தது. நண்பர்கள் உதவினார்கள். யார் மீதும் குறை சொல்ல இயலாது. நமது வெற்றி தோல்விகளுக்கு அநேகமாக நாமே தான் காரணமாக இருப்போம் என்று இயக்குனர் பாலாஜி தரணிதரன் கூறியிருக்கிறார்.





