- Advertisement -
நடிகர் அர்ஜூன் நடிகை அபிராமி நடித்த பிளாஸ்ட் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்தவர் ப்ரீத்தி முகுந்தன். இந்த படத்தில் ஒரு கராத்தே வீராங்கணையாக தைரியமான ஒரு பெண் கேரக்டரில் ஆக்சன் காட்சிகளில் அவர் அசத்தியிருந்தார். இப்போது டி 56 படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். அதுபற்றி ப்ரீத்தி முகுந்தன் கூறுகையில், ஒரு படத்தை தேர்வு செய்யும் போது இயக்குனர் கதையை விவரிக்கும் விதத்தையும் கதாநாயகியின் கேரக்டருக்கு உரிய முக்கியத்துவம் உள்ளதா என்பதையும் கவனிப்பேன். சினிமாவின் ஆரம்ப காலத்தில் சில கதைகளை தவறாக தேர்வு செய்தேன். அந்த அனுபவத்தின் மூலம் சரியான கதைகளை தேர்ந்தெடுக்க கற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.





