லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோஸில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் ஒரு கேங்கஸ்டர் திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார், செவன் ஸ்கிரீன் லலித் குமார் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

“லியோ” திரைப்படத்தில் தற்போது ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளிவந்தது. அந்த பாடல் காட்சியில் கிட்டத்தட்ட 2000 டான்சர்கள் நடனமாடுகிறார்களாம். இந்த நிலையில் தற்போது இந்த பாடலை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது இந்த பாடல் ஒரு குத்து பாடலாக உருவாகி வருகிறதாம். அதுவும் இந்த பாடலை விஜய்தான் பாடியுள்ளாராம். இந்த குத்து பாடலுக்கு விஜய் தரலோக்கலாக நடனமாடியுள்ளாராம். இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“லியோ” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வர, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உட்பட பலரும் நடித்து வருகிறார்கள். இதில் அர்ஜூன் ஒரு முக்கியமான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் மிஷ்கின் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக அவரே ஒரு விழாவில் கூறியிருந்தார்.
வருகிற 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு “லியோ” திரைப்படத்தின் டீசர் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பிறந்தநாளில் “லியோ” திரைப்படத்தின் போஸ்டர் மட்டுமே வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் “லியோ” திரைப்படம் LCUக்குள் வருமா? வராதா? போன்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.





