- Advertisement -
தமிழ் சினிமாவில் 100 கோடி 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் கூட இன்னும் இன்னும் சம்பளத்தை உயர்த்த ஆர்வமாக உள்ளனர். ஆனால் மைனா போன்ற சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விதார்த் பணம் குறித்து யதார்த்தமாக பேசியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விதார்த் கூறியதாவது, நான் சினிமாவில் பணத்தை பெருசாக எதிர்பார்க்கவில்லை. எனக்கு லைஃப்ல செலவெல்லாம் ஒரு பிரச்சனை கிடையாது. மாதம் 1000 ரூபாய் இருந்தால் கூட போதும். எனக்கு ஒரு செலவும் கிடையாது. பணத்தை சேர்த்து வைக்கணும் என்று ஆசை இல்லை. இப்போது கூட என்னுடைய பேங்க் பேலன்ஸ் விட உங்களோட பேங்க் பேலன்ஸ் அதிகமாக இருக்கலாம். கையில வர்றதை வச்சு ஜாலியா இருக்கணும் என்று நடிகர் விதார்த் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





