- Advertisement -
சமீபத்தில் மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் சூர்யா பேசியதாவது, சினிமாவில் ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் பல முறை ரீடேக் எடுப்போம். ஒவ்வொரு முறையும் டைரக்டர் தோல்வி அடைந்து விட்டாய் என்று சொல்லாமல் ஒன்மோர் என்று இன்னொரு வாய்ப்பு கொடுப்பார். வாழ்க்கையும் அப்படித்தான். மதிப்பெண் கல்லூரி இடம் முதல் வேலை என எதிலும் திருப்தி இல்லை என்றால் அதுவே முடிவல்ல. இன்னொரு முறை முயற்சி செய்யுங்கள். இன்னும் சிறப்பாக செய்ய முடியும். ஒன்மோர் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று நடிகர் சூர்யா கூறியிருக்கிறார்.





