- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் நெப்போலியன் - முழுக்க முழுக்க அமெரிக்காவில்...

மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் நெப்போலியன் – முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவான காமெடி ஹாரர் படம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக இருந்தவர் நெப்போலியன். பிறகு எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். திமுகவில் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் இருந்த நெப்போலியன் பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது சென்னைக்கு பிஸினஸ் ரீதியாக வந்து செல்வார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஆவி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நெப்போலியன் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரும் அமெரிக்க ஆவி திரைப்படம் காமெடி ஹாரர் படமாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் உலகம் முழுவதும் இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

சற்று முன்