- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் கலாச்சாரத்தை கெடுக்காதீங்க, உங்களை ஒதுக்கி தள்ளிடுவாங்க- விஜய் மகனை எச்சரிக்கும் பிரபல தயாரிப்பாளர்

தமிழ் கலாச்சாரத்தை கெடுக்காதீங்க, உங்களை ஒதுக்கி தள்ளிடுவாங்க- விஜய் மகனை எச்சரிக்கும் பிரபல தயாரிப்பாளர்

- Advertisement -

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரது திட்டம் வேறு மாதிரியாக இருந்தது. அதாவது வெளிநாட்டிற்குச் சென்று பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிப்பை முடித்த ஜேசன் சஞ்சய், ஒரு உலகத்தரம் வாய்ந்த குறும்படத்தை இயக்கினார்.

அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு திடீரென ஒரு அறிவிப்பு வெளிவந்தது. அதாவது லைகா நிறுவனத்திற்காக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற அறிவிப்புதான் அது. இந்த அறிவிப்பு வெளிவந்தபோது ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர்.

- Advertisement -

ஜேசன் சஞ்சய் நிச்சயம் சினிமாவில் ஹீரோவாகத்தான் அறிமுகமாவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென அவர் இயக்குனராக ஆனதுதான் அந்த ஆச்சரியத்திற்கு காரணம்.

இதற்கு முன் ஒரு பேட்டியில் எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய பேரன் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக கூறினார். தற்போது ஜேசன் சஞ்சய் இயக்குனராக ஆகி உள்ளார். இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் ஹீரோவாக நடிப்பார் என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் அவரிடம், “விஜய்யின் மகன் லைகா நிறுவனத்தில் இயக்குனராக அறிமுகமாகப்போகிறார். நிறைய பேர் இங்கே வாய்ப்பில்லாமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். விஜய் மகன் என்பதால்தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது என கூறுகிறார்களே?” என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த கே.ராஜன், “விஜய் மகன் என்பதாலேயே அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருக்க முடியாது. இதனை தவிர்க்கவும் முடியாது. விஜய் இப்போது உச்ச நடிகராக இருக்கிறார். அவரது மகன் இயக்குனராக வருவதை நாம் வரவேற்போம். இளைஞர்கள் வரட்டும். ஆனால் தமிழ் கலாச்சாரத்தோடு ஒட்டிய படமாக இருக்க வேண்டும்.

மேல்நாட்டில் படித்துவிட்டோம் என்பதற்காக மேல்நாட்டு கலாச்சாரத்தை உள்ளே விட்டீர்கள் என்றால் தமிழர்கள் உங்களை ஒதுக்கிவிடுவார்கள். ஆதலால் தமிழ் கலாச்சாரம் கொஞ்சம் கூர நழுவக்கூடாது” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

சற்று முன்