- Advertisement -
Homeபொழுதுபோக்குபார்வையாளர்களின் விமர்சனங்களுக்காக ஆவலாக காத்திருக்கிறேன் - வித்யாசமான கேரக்டரில் நடித்தது குறித்து பேசிய கபாலி பட...

பார்வையாளர்களின் விமர்சனங்களுக்காக ஆவலாக காத்திருக்கிறேன் – வித்யாசமான கேரக்டரில் நடித்தது குறித்து பேசிய கபாலி பட நடிகை!

- Advertisement -

அக்கா வெப் தொடர் குறித்து அதில் நடித்துள்ள கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே கூறியதாவது, அக்கா வெப் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பும் டீசர் வெளியீடும் கீர்த்தியின் பிறந்தநாளில் வெளியானது மகிழ்ச்சி. நான் நடித்திருக்கும் ருத்ரா கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது. அவள் தனது கொள்கைகளால் வழிநடத்தப்படுபவள். தன்னை சுற்றியுள்ள உலகத்தையே கேள்விக்குறியாக்கும் இயல்பும் அவளுக்கு உண்டு. கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மையும் அவர்களின் மாறுபட்ட கண்ணோட்டங்களால் உருவாக்கும் பதட்டங்களும் தான் என்னை இந்த தொடரில் நடிக்க சம்மதிக்க வைத்தது. நெட்பிளிக்ஸ் உடன் கடந்த பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறேன். இதில் அக்கா மறக்க முடியாத தொடர். பார்வையாளர்களின் விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார்.

சற்று முன்