- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்திலிருந்து வெளியான அடுத்த அறிவிப்பு... இந்த முறை போஸ்டரில் இடம் பெற்றிருப்பது யார் தெரியுமா......

கூலி படத்திலிருந்து வெளியான அடுத்த அறிவிப்பு… இந்த முறை போஸ்டரில் இடம் பெற்றிருப்பது யார் தெரியுமா… சூப்பர் சம்பவம் வெயிட்டிங்…

- Advertisement -

ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் திரைப்படம் கூலி. ஏற்கனவே சரத்குமார் கூலி எனும் படத்தில் நடித்திருக்கும் நிலையில், தற்போது அதே பெயர்தான் இதற்கும் வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

 

- Advertisement -

தங்கம் கடத்தலை மையமாக வைத்து தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. பீரியட் படமாக இதனை எடுத்து வருகிறார்கள். படத்தில் ரஜினி துறைமுகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளியாக நடிக்கிறாராம். அவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்று கூறுகிறார்கள்.

 

- Advertisement -

ரஜினியின் நண்பனாக சத்யராஜ் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ அண்மையில் வெளியானது. அதில் அனிருத்தின் இசை, வலு சேர்க்கும் வகையில் அமைந்தது. அது மட்டுமில்லாமல் ரஜினியின் டயலாக்கும் பலரும் ரசிக்கும் வகையில் அமைந்தது.

 

இந்த திரைப்படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது விசாகப்பட்டினத்தில் முக்கிய காட்சிகளை எடுத்து வருகிறார்கள். அதில் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இது நடுவே கூலி படத்தில் நடிக்கும், முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குட்டன் கதாபாத்திரத்தில் நடித்த சௌபின் ஷபீர், இதில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு வில்லன் வேடம் என்று கூறப்படுகிறது.

 

இதே போல் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் படத்தில் இருக்கிறார். சைமன் என்ற கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். இந்த நிலையில், ஸ்ருதிஹாசன் படத்தில் இருப்பது தற்போது உறுதியாகி இருக்கிறது. அவர் பிரித்தி என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருக்கிறார். படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு லோகேஷ் கனகராஜிற்கு ஸ்ருதி நன்றி தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்