கோலிவுட்டின் முன்னணி நடிகை நயன்தாரா. தனது கரியரில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கும் அவர் தற்போது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து பல வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்த அவர் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் நயன் தற்போது ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். அட்லீ இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படமானது செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சென்னை சாய்ராம் கல்லூரியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
எப்போது ப்ரோமோஷன்களில் கலந்துகொள்வதில்லை என்ற கொள்கையில் இருக்கும் நயன் கண்டிப்பாக ஜவான் ப்ரோமோஷனில் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த அவர் ஷாருக்காக இருந்தாலும் நோ மீன்ஸ் நோதான் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார். இதனால் அவரை தவிர படத்தில் பணியாற்றிய மற்றவர்கள் அனைவருமே கலந்துகொண்டனர்.
இருந்தாலும் ஜவான் படத்தை வைத்து ஹிந்தியில் ஒரு ரவுண்டு வர அவர் திட்டிமிட்டிருக்கிறார். அதற்கு ஷாருக்கான் போன்ற பெரிய ஹீரோக்களின் சப்போர்ட் வேண்டும். ஆனால் ப்ரோமோஷனில் கலந்துகொள்ளாததால் அவர் ஏதேனும் நினைத்துக்கொள்வாரோ என்று யோசித்த நயன் ட்ரிக்காக ஒரு வேலையை செய்தார். அதாவது இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை ஆரம்பித்தார். அது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
கணக்கை ஆரம்பித்த அவர் முதல் போஸ்ட்டாக நான் வந்துட்டேன்னு சொல்லு என்ற கேப்ஷனோடு ஹூக்கும் பாடல் பின்னணியில் ஒலிக்க தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு நடந்துவரும் வீடியோவை பதிவிட்டார். அதனையடுத்து ஜவான் படம் தொடர்பான பதிவுகளை பதிவு செய்தார். அவர் போடும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் லைக்கும், ஷேரும் குவிந்தன. இதனால் ஜவானுக்கு நயன்தாரா ப்ரோமோஷன் செய்த கணக்கும் இதில் தீர்ந்துவிட்டது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் கணக்கு ஆரம்பித்த ஒரு நாளிலேயே அவருக்கு ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்துள்ளனர். இதற்கு முன்னதாக கத்ரீனா கைஃபுக்குத்தான் ஒரே நாளில் ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்தப் பெருமையை நயன்தாராவும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவருக்கு 2.2 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார். கணக்கு ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகின்றன.





