- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு சீனியர் ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர் விக்னேஷ் சிவன்...

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு சீனியர் ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது இப்படி ஒரு புகாரா? – என்ன ப்ரோ இதெல்லாம்?

- Advertisement -

போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார் விக்னேஷ் சிவன். ஒரு கட்டத்தில் அஜீத்குமார் படத்தை அவர் இயக்குவதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அஜீத்குமார், அவரை வேண்டாம் என மறுத்துவிட்டார்.

அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு, இப்போது எல்ஐசி என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் லவ்டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைகிற தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. எல்ஐசி என்ற பெயரில் பிரச்னை உள்ளதால், எல்ஐகே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை லியோ படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின், நடிகர் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோரும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வமாக இன்னும் கூறப்படவில்லை.

இதற்கிடையே இந்த படத்தை இயக்கி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன், தமிழ் சினிமா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்றால் ஒரு ஹீரோ போல ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். பலரும் அவருடன் செல்பி எடுத்துக்கொள்கின்றனர். ஆட்டோகிராப் வாங்குகின்றனர். அவரும் நயன்தாரா கணவர் என்ற கெத்துடன் தான் பல இடங்களிலும் காணப்படுகிறார்.

இந்நிலையில் எல்ஐசி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் முதலில் ஒளிப்பதிவாளராக பணிசெய்தவர் ரவிவர்மன். ஒரு கட்டத்தில் அவர் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அடுத்து ஒளிப்பதிவாளராக வந்தவர் நீரவ் ஷா. இவரும் ஒரு கட்டத்தில் படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், 3வது ஒளிப்பதிவாளராக புதுமுகம் ஒருவரை தேடிக்கொண்டு இருக்கிறது படக்குழு.

சீனியர் ஒளிப்பதிவாளர்களான ரவிவர்மன், நீரவ் ஷா ஆகியோர் இந்த படத்தில் இருந்து விலகியதற்கு காரணம், இயக்குனர் விக்னேஷ் சிவன்தான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. ஏனெனில் படப்பிடிப்பு தளத்தில் வயது மற்றும் அனுபவம், சீனியாரிட்டி அடிப்படையில் இயக்குனரை விக்கி, விக்னேஷ் சிவன் என பெயர் சொல்லி பல பேர் முன்னிலையில் அவர்கள் அழைத்ததால், விக்னேஷ் சிவன் அடிக்கடி அப்செட் ஆகி இருக்கிறார். இந்த ஈகோ காரணமாகவே அவர்கள் வெளியேறும் ஒரு சூழலை விக்னேஷ் சிவனே உருவாக்கி வெளியேற்றிய தகவல் இப்போது வெளிவந்துள்ளது. சார் அல்லது டைரக்டர் என சொல்லும் புதுமுகம் அல்லது வளரும் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

சற்று முன்