- Advertisement -
புரட்சித்தலைவர் எம்ஜிஆரிடம் மேக்கப் மேனாக இருந்தவர் பீதாம்பரம். இவரது மகன்தான் சின்னதம்பி படத்தின் இயக்குனர் பி வாசு. எம்ஜிஆரிடம் சொல்லி இயக்குனர் ஸ்ரீதரிடம் பி வாசுவை உதவி இயக்குனராக சேர்த்து பாதை அமைத்துக் கொடுத்தவர் பீதாம்பரம்தான். அதற்கு முன்பே ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சந்தானபாரதி. 1977ம் ஆண்டில் ஸ்ரீதர் இயக்கி எம்ஜிஆர் நடித்து வெளியான மீனவ நண்பன் படத்தில் சந்தான பாரதி பி வாசுவும் உதவி இயக்குனராக இணைந்து பணிபுரிந்துள்ளனர். அதன்பிறகு பன்னீர் புஷ்பங்கள் என்ற மெகா ஹிட் படத்தை இரட்டை இயக்குனர்களாக பி.வாசு சந்தன பாரதி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





