- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது படத்தின் ரிலீஸ் தேதியை அறித்த டைரக்டர் அட்லி, ஆனா அதுக்கு இன்னும் பல மாசங்கள்...

தனது படத்தின் ரிலீஸ் தேதியை அறித்த டைரக்டர் அட்லி, ஆனா அதுக்கு இன்னும் பல மாசங்கள் இருக்கேப்பா? – ரசிகர்கள் கேள்வி

- Advertisement -

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிசெய்தவர் அட்லி. ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆர்யா, நயன்தாரா, சத்யராஜ், ஜெய், நஸ்ரியா, சத்யன், சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. முதல் படமே அட்லிக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த 3 மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்து, தமிழில் பெயர் சொல்லும்படியான முன்னணி இயக்குனராக அட்லி மாறினார். தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 படங்களுமே விஜய்க்கு பெரிய ஹிட் படங்களாக அமைந்தன. இதையடுத்து, அட்லி பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். அதுவும் மாஸ் ஹிட் படமாக ரூ. 1160 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்தது.

- Advertisement -

இயக்குனர் அட்லி பொருத்தவரை அவரது படங்கள் பெரும்பாலும் பழைய தமிழ் படங்கள், ஆங்கில படங்கள், மலையாள படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட காட்சிகளும், கதைகளும் நிறைந்திருக்கும். எனினும் ஏதேனும் ஒரு விதத்தில் ரசிகர்களை அந்த படங்கள் கவர்ந்து, பெரிய அளவில் வெற்றி பெற்று விடுகின்றன. ஜவான் படம் கூட 23 படங்களில் காப்பி என்றுதான் விமர்சிக்கப்பட்டது.

அதன்பிறகு அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் ஒன்றை, சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் அதை இயக்குனர் அட்லி இயக்குவதாகவும் தகவல் இருந்தது. இதற்கிடையே இந்தி ஸ்டார் நடிகர் சல்மான்கான் நடிக்கும் படத்தை அட்லி டைரக்ட் செய்வதாகவும் ஒரு லேட்டஸ்ட் தகவல் பரவி வருகிறது. இதற்கான பரீ புரடக்சன்ஸ் பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தமிழில் அட்லி இயக்கிய படங்களில் தெறி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்த படமாக அமைந்தது. அந்த படத்தை, இயக்குனர் அட்லி, இந்தியில் ரீமேக் செய்துள்ளார். அந்த படத்தில் நாயகனாக வருண் தவான், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா காபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பேபி ஜான் என இந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தை அட்லி டைரக்ட் செய்யவில்லை.

படங்களை இயக்குவது மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் மாறியுள்ள இயக்குனர் அட்லி, பேபி ஜான் படத்தை அவரே சொந்தமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் தெறி. அதனால் அதன் இந்தி ரீமேக் பேபி ஜான் படத்தை ரசிகர்கள் பெரிய ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த படம், வருகிற டிசம்பர் மாதம் 25ம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் வெளியாக இருப்பதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்