- Advertisement -
Homeபொழுதுபோக்குசார், இந்த இடத்துக்கு எப்படி போறது- ரஜினிகாந்திடமே வழி கேட்ட பிரபல நடிகர், இதுக்கெல்லாம் கொடுத்து...

சார், இந்த இடத்துக்கு எப்படி போறது- ரஜினிகாந்திடமே வழி கேட்ட பிரபல நடிகர், இதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கனும் போல

- Advertisement -

சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் என்பது பலரும் அறிந்ததே. அப்படிப்பட்ட ரஜினிகாந்திடமே ஒருவர் வழி கேட்டிருக்கிறார். அவர் யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

1982 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “காதல் ஓவியம்”. இத்திரைப்படத்தில் கண்ணன் என்ற நடிகர் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். இவரை “காதல் ஓவியம்” கண்ணன் என்று அழைப்பார்கள்.

கண்ணனின் உண்மையான பெயர் சுனில் கிரிப்லானி. இவர் சிந்து பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு முதலில் ஒரு பெங்காலி திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அந்த கதாபாத்திரம் ஒரு வயதான கதாபாத்திரம் என்பதால் அவருக்கு வயதான கெட்டப் போட்டு ஒரு ஃபோட்டோஷூட் எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் வயதான கெட்டப் போட்டாலும் அவர் இளமையாகவே தெரிந்தார் என்பதால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அந்த பெங்காலி படத்தில் இருந்து ரிஜெக்ட் ஆன அதே நிமிடத்தில்தான் பாரதிராஜாவின் உதவியாளர் ஒருவர் அவரை அணுகியிருக்கிறார். அதன் பின் பாரதிராஜாவை சென்று பார்த்த அவர், “காதல் ஓவியம்” திரைப்படத்தில் ஒப்பந்தமானார்.

அத்திரைப்படத்தில் கண் பார்வையற்றவராக நடித்திருந்தார் கண்ணன். அவர் அத்திரைப்படத்தில் நன்றாக நடித்திருந்தாலும் அத்திரைப்படம் சரியாக போகவில்லை. ஆதலால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வாய்ப்பு தேடி பல ஸ்டூடியோக்களுக்கு அலைந்தார். அந்த சமயத்தில் ஒரு ஸ்டூடியோவில் வாய்ப்பு தேடி போனபோது, அந்த ஸ்டூடியோவில் இருந்து வெளியே வர வழி தெரியாமல் முழித்திருக்கிறார். அப்போது தூரத்தில் ஒரு நபர் ஸ்டைலாக நின்றுகொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தாராம்.

அவரிடம் சென்று கேட்கலாம் என்று நினைத்த அவர், நேராக அவர் அருகே சென்றிருக்கிறார். நெருங்க நெருங்கதான் அவருக்கு தெரிய வந்ததாம், அவர் ரஜினிகாந்த் என்று. உடனே ஸ்தம்பித்துப்போனாராம்.

கண்ணனை பார்த்த ரஜினிகாந்த், “வாங்க கண்ணன், உங்க படம் பார்த்தேன். நல்லா இருந்தது. ஆனால் அந்த படம் ஓடவில்லை என்பது எனக்கு வருத்தம்தான்” என கூறினாராம். அதன் பின் கண்ணன், அந்த ஸ்டூடியோவில் இருந்து எப்படி வெளியே போவது என அவரிடமே கேட்டாராம். அதற்கு ரஜினிகாந்த் எப்படி வெளியே போக வேண்டும் என கூறினாராம். இவ்வாறு தான் ரஜினிகாந்தை சந்தித்த தருணத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் கண்ணன்.

சற்று முன்