- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 டிரெய்லர் வெளியீடு - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர்...

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 டிரெய்லர் வெளியீடு – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ல் படம் திரைக்கு வருகிறது!

- Advertisement -

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கும் முதலில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு புது கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாராவுடன் ஊர்வசி சினேகா இனியா ரெஜினா கசாண்ட்ரா துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டிரெய்லர் வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இதில் பயந்த சுபாவம் கொண்ட பெண் போலீசாக நயன்தாராவும் அம்மனாக நயன்தாராவும் இரு வேறு பரிமாணங்களில் நடித்துள்ளனர். தீய சக்திகளாக வில்லத்தனமான கேரக்டரில் துனியா விஜய் ரெஜினா நடித்துள்ளனர். நிகழ்காலம் மற்றும் சரித்திரம் கலந்த படமாக இது உருவாகியுள்ளது.தீபாவளி முன்னிட்டு படம் நவம்பர் 6ல் வெளியாக உள்ளது.

சற்று முன்