- Advertisement -
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமான கலைஞர்களில் ஒருவர் தலைவாசல் விஜய். குணச்சித்திர நடிப்பில் அழுத்தமான நேர்த்தியான நடிப்பை தந்து அசத்தி விடுவார். சமீபத்தில் ரிசார்ட் என்ற வெப் தொடரில் நெடுமாறன் கேரக்டரில் செஃப் ஆக நடித்து மிரட்டியிருந்தார். எப்போதுமே நடிகர் தலைவாசல் விஜய் புதிய திறமையாளர்களை ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் அக்கறை கொண்டவர். அதனால் அவர் குறும்படங்களில் நடிப்பதற்காக பல நேரங்களில் பணம் எதுவும் வாங்காமல் இலவசமாக நடித்துக் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





