- Advertisement -
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நவம்பர் 4ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இந்த விழாவை நடத்த படக்குழு தரப்பில் ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த விழா தீபாவளி பண்டிகையின் போது டிவி சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போது தொடர் மழை காரணமாக இந்த திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் வரலாம் என்றும் ஒரு தகவல் கூறப்படுகிறது.





