- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதி மகன் நடித்த பீனிக்ஸ் படம் தள்ளிப் போக நடிகர் விஜய்தான் காரணம், வெளிச்சத்துக்கு...

விஜய் சேதுபதி மகன் நடித்த பீனிக்ஸ் படம் தள்ளிப் போக நடிகர் விஜய்தான் காரணம், வெளிச்சத்துக்கு வந்த உண்மை – இதுல கங்குவா சூர்யா தப்பிச்சுட்டாரா?

- Advertisement -

நடிகர்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் நடிகர்களாக அறிமுகமாகி நடிப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் பிரபு, கார்த்திக், அதர்வா, சிபிராஜ், ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக், சண்முகபாண்டியன், உமாபதி, சூர்யா, கார்த்தி என பலரை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் வாரிசுகளாக அவர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டாலும் அடுத்தடுத்த படங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றால் மட்டுமே சினிமாவில் நீடித்திருக்க முடியும். இல்லை என்றால் வெகு சீக்கிரத்தில் காணாமல் போய்விடுவர். அப்படி பல பேரை குறிப்பிட்டுச் சொல்லாம்.

- Advertisement -

அந்த வரிசையில் இப்போது நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதியும் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவரது இயக்கத்தில் பீனீக்ஸ் விழான் என்ற புதிய படத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நாயகனாக நடித்துள்ளார்.

இம்மாதம் 14ம் தேதி கங்குவா படம் ரிலீஸாகும் அதே நாளில்தான் பீனிக்ஸ் படமும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சீனியர் சூர்யா, ஜூனியர் சூர்யா நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகின்றன என்றும் தகவல் வைரலானது. ஆனால் ஒரு நாள் முன்னதாக 13ம் தேதி. பீனிக்ஸ் படம் அறிவித்தபடி 14ம் தேதி ரிலீஸ் ஆகாது. படம் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கிறோம் என்று படக்குழு அறிவித்து விட்டது.

- Advertisement -

இந்த திடீர் அறிவிப்பு காரணம், பீனிக்ஸ் படத்தில் இடம்பெற்ற கட்சிக்கொடி தான். நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் முன்பே, பீனிக்ஸ் படம் முழுவதும் ஒரு கட்சி கொடியை காட்டியுள்ளனர். இப்போது அந்த கொடியும், விஜயின் கட்சிக்கொடியும் ஒரு மாதிரி இருப்பதால், அதன் காரணமாகவே பீனிக்ஸ் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

படத்தில் காட்டியுள்ள கொடியின் நிறங்களை சிஜி தொழில்நுட்பத்ததில் மாற்றிய பிறகுதான் படத்தை ரிலீஸ் செய்ய தேதியை படக்குழு அறிவிக்க உள்ளனர். இப்படி விஜய் கட்சிக்கொடியால் இந்த படத்துக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கங்குவா படம் ரிலீஸான அதே நாளில் பீனிக்ஸ் படம் ரிலீஸாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தால், இன்னும் விமர்சனங்கள் கடுமையாக இருந்திருக்கும். சூர்யா எப்படியோ விஜய் மூலம் தப்பித்து விட்டார் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்