- Advertisement -
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் 2 படம் வருகிற நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் சென்னை பூந்தமல்லியில் 60 அடி உயரத்தில் நயன்தாரா கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதே போல் செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் தியேட்டரில் இந்தியாவிலேயே முதல் முறையாக நடிகை நயன்தாராவுக்கு 60 அடி கட் அவுட் வைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் பிலிம் நிறுவனம் அறிவித்துள்ளது. எந்த நடிகைக்கும் இல்லாத இந்த சிறப்பு நடிகை நயன்தாராவுக்கு தரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.





