- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென இப்படி ஒரு முடிவெடுத்த நடிகை திரிஷா - இந்த விஷயத்தை பத்தி உங்க ஹீரோகிட்ட...

திடீரென இப்படி ஒரு முடிவெடுத்த நடிகை திரிஷா – இந்த விஷயத்தை பத்தி உங்க ஹீரோகிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டீங்களா மேடம் !

- Advertisement -

நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு பிஸியான நடிகையாகி மாறிக்கொண்டு இருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வருகிறது. இப்போது விஜய் ஜோடியாக திரிஷா நடித்த லியோ படம் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

லியோ படத்தை பொருத்தவரை, விஜய் நடிப்பை சிலாகித்து பேசிய அளவுக்கு, திரிஷாவை பலரும் கண்டுகொள்ளவில்லை. இந்த படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக, அதுவும் பிளஸ் 2 படிக்கும் பையனுக்கு தாயாக, நடுத்தர வயது பெண்ணாக திரிஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பல காட்சிகளில் அவரது நடிப்பு பக்குவமாக வெளிப்படுகிறது.

அதுமட்டுமின்றி இதுவரை திரிஷா நடித்த படங்களில், இப்படி வெளிப்படையாக உதட்டு முத்தக்காட்சிகளில் நடித்ததில்லை. இந்த படத்தில், விஜய்க்கு உதட்டு முத்தம் தரும் காட்சியில் நடித்து, விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், அஜீத் ரசிகர்களுக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தி விட்டார்.

படத்தை பொருத்தவரை உணர்ச்சிபூர்வமான காட்சியாக அது இருந்தாலும், அந்த இடத்தில் முத்தக்காட்சி ஒன்றும், அவ்வளவு அவசியமான ஒன்று அல்ல. ஒருவேளை உண்மையான பார்த்திபன் கேரக்டராக இருந்தாலும் பரவாயில்லை. லியோ என்பதை மறைத்து, மனைவியிடமே பொய் சொல்லி நடித்து நாடகமாடும் பார்த்திபனுக்கு அந்த முத்தம் அவசியமும் இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இப்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் நடித்துவரும் விடாமுயற்சி படத்தில், அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தில், ஒரு பிளாஸ்பேக் காட்சி வருகிறது. அதில் சிறுவயது பெண் போன்ற தோற்றத்தில் திரிஷா – இளம் வயது அஜீத் வருவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.

இதற்காக, இந்த பிளாஸ்பேக் காட்சியில் தன்னை இளம்பெண்ணாக காட்டிக் கொள்ள, உடல் எடை குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார் திரிஷா. அவரே ஏற்கனவே ஸ்லிம்மாக உள்ள நிலையில், சற்று பருமனான தோற்றத்தில் காணப்படும் அஜீத் குமார் தான் முதலில் எடையை குறைக்க வேண்டும். அப்போதுதான் இருவரும் இணைந்து நடிக்கும்போது சரியான ஜோடி பொருத்தமாக இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

சற்று முன்