- Advertisement -
ஆந்திராவில் நடந்த ரணபாலி திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பையும் மீறி வேகமாக வந்த சில ரசிகர்கள் மேடையில் ஏறி அவரது காலில் விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் தேவரகொண்டா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். இதையடுத்து உஷாரான பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு ரசிகர்களை மேடையில் இருந்து கீழே இறக்கி அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.





