- Advertisement -
Homeபொழுதுபோக்கு8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது, இப்போ எதுக்கு பொதுவெளியில் கொண்டு வர்றாங்க?...

8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது, இப்போ எதுக்கு பொதுவெளியில் கொண்டு வர்றாங்க? – மிகவும் வருத்தப்பட்டு பேசிய நடிகர் பிளாக் பாண்டி!

- Advertisement -

காமெடி நடிகர் பிளாக் பாண்டி ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, நான் சிவா எல்லாம் விஜய் டிவியில் ஒன்றாக இருந்தவர்கள். அதனால் பெரிய நடிகரான பிறகு ஒரு முறை சிவகார்த்திகேயன் எனக்கு மேனேஜர் மூலம் பணம் கொடுத்து அனுப்பினார். அந்த பணம் வாங்கினால் எனக்கு போதாது. அடிக்கடி அவரிடம் இப்படி பணம் வாங்குவதும் தவறு என்பதால் படத்தில் நடிக்க ஏதாவது வாய்ப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த பணத்தை திருப்பி தந்து விட்டேன். ஆனால் அது தவறுதலாக ஊடகங்களில் வெளியாகி எனக்கும் சிவாவுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. பிறகு சிவாவிடம் நேரில் பேசி விளக்கியதால் அந்த பிரச்னையும் முடிந்து விட்டது. ஆனால் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தை மீண்டும் பொதுவெளியில் கொண்டு வந்துள்ளனர். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று பிளாக் பாண்டி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

சற்று முன்