- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் துவங்கி வைத்த மை டிவிகே செயலி… பொதுமக்களுக்கு ஏமாற்றம்… ஆரம்பமே இப்படி ஒரு...

நடிகர் விஜய் துவங்கி வைத்த மை டிவிகே செயலி… பொதுமக்களுக்கு ஏமாற்றம்… ஆரம்பமே இப்படி ஒரு சொதப்பலா? – புலம்பும் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பாலான தொகுதிகளில் அதிக ஓட்டுகளை பெற்று மாபெரும் எழுச்சியுடன் ஆட்சியை பிடிக்கும். தமிழக முதல்வராக பொறுப்பேற்று மக்களுக்கான நல்லாட்சியை நான் தருவேன் என்று கடந்தாண்டில் கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் தொடர்ந்து ஆவேசமாக பேசி வருகிறார்.

நடிகர் விஜய் அரசியல் இயக்கம் ஆரம்பித்ததை பலரும் வரவேற்ற நிலையில் ஒரு தரப்பினர் எதிர்மறை விமர்சனமும் செய்து வருகின்றனர். எனினும் அதிமுக திமுக என இரண்டு திராவிட கட்சிகளே தமிழகத்தை மாறி மாறி ஆட்சி நடத்தி வரும் நிலையில் புதிதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் தமிழக மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழலில் ஜனநாயகன் படத்தை முடித்து விட்டு நடிகர் விஜய் இப்போது கட்சி பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் தவெக கட்சியில் 2வது மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே இன்று மை டிவிகே என்ற செயலியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

மை டிவி கே செயலியை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியின் தலைவர் நடிகர் விஜய், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது, கடந்த 1967ம் ஆண்டு 1977ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களைப் போல வரும் 2026 தேர்தலும் அமையும். அப்போது மக்கள் அதிகார பலத்தை எதிர்த்து எப்படி வெற்றி பெற்றார்களோ, அதே போல் வரும் 2026ம் ஆண்டு தேர்தலிலும் அப்படி நடக்கும்.

- Advertisement -

அறிஞர் அண்ணாதுரை கூறியது போல், மக்களிடம் செல் மக்களிடமிருந்து கற்றுக்கொள் என்பதையே வழிகாட்டியாக கொண்டு செயல்பட வேண்டும். ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு என்று மக்களிடம் நேரில் சென்று பேச வேண்டும். மக்களோடு மக்களாக இருந்து செயல்படுவதே கட்சிக்கு பெருமை என்றும் நடிகர் விஜய் அந்த கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து கட்சியின் அதிகாரபூர்வமான செயலி மை டிவிகே என்ற செயலியை அவர் அறிமுகப்படுத்தினார். இதில் உறுப்பினர் சேர்க்கை செய்ய பலரும் அந்த செயலியை டவுன்லோட் செய்தனர்.

இந்நிலையில், அதில் ஓடிபி மூலம் உறுதி செய்த பலருக்கும் You are not a cadre to access My TVK என்று பதில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் அனைவரும் இந்த ஆப்பை பயன்படுத்தலாம் என்று எதிர்பார்த்த நிலையில், உறுப்பினர்களுக்கான தனி உள்நுழைவு மட்டுமே இதில் இயக்கப்பட்டு இருப்பது கடும் ஏமாற்றத்தை மக்களுக்கு தந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இது டிவிகே கட்சியின் சொதப்பல் என்றும், இது பொதுமக்களுக்கானதா இல்லை கட்சியினரின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கானதா என்பதே புரியவில்லை என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்