- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் ஷங்கர் மணிரத்னம் போல கிடையாது, பெரிய டெக்னீஷியனும் இல்லே, ஆனா களை எடுக்கற வேலையை...

நான் ஷங்கர் மணிரத்னம் போல கிடையாது, பெரிய டெக்னீஷியனும் இல்லே, ஆனா களை எடுக்கற வேலையை செய்றேன் – வெளிப்படையாக பேசிய இயக்குனர் பாலா!

- Advertisement -

இயக்குனர் பாலா 1999ம் ஆண்டில் சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதுவரை 25 ஆண்டுகளில் அவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 10 கூட தாண்டவில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் மிகவும் கவனம் பெற்ற ஒரு இயக்குனராக முதல் படத்தில் இருந்தே கவனிக்கப்படுகிறார்.

சேது படம்தான் நடிகர் விக்ரமுக்கும் பெரிய அடையாளத்தை தந்தது. இந்த படத்தில் நடித்த பிறகுதான் விக்ரம் என்ற சிறந்த ஆளுமை மிக்க கலைஞரை தமிழ் சினிமா அடையாளம் கண்டு கொண்டது. அதன்பிறகுதான் அந்நியன் காசி சாமி ஐ அருள் ராவணன் போன்ற படங்கள் வெளியாகின. கடைசியாக விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் வெளியானது.

- Advertisement -

அதே போல் நந்தா நான் கடவுள் பிதாமகன் பரதேசி அவன் இவன் தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களை தந்து சூர்யா ஆர்யா அதர்வா சசிக்குமார் விஷால் போன்றவர்களுக்கும் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்த பெருமை பாலாவுக்கு உண்டு. அந்த வகையில் அருண் விஜய்க்கும் வணங்கான் படம் அந்த அடையாளத்தை பெற்றுத் தரப் போகிறது.

வருகிற 10ம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படம் வெளியாக உள்ளது. அருண் விஜய் வாய் பேசாத கேரக்டரில் நடித்துள்ளார். சூர்யா நடிக்க மறுத்த நிலையில் இந்த படத்தில் அருண் விஜய் நடித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் வணங்கான் படம் பிரமோசனுக்கான நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பாலா கூறியதாவது, நான் மணிரத்னம் சாரோ ஷங்கர் சாரோ கிடையாது. பெரிய டெக்னீஷியனும் இல்லை. நான் ஒரு கதை வசனகர்த்தா. நடிகர்களை பெரிதாக நடிக்க வைக்கிறதும் இல்லை.

நான் புதுசா எந்த நடிகருக்கும் எதையும் சொல்லிக் கொடுக்கிறது இல்லை. நான்தான் பாதை போட்டுக் கொடுத்தேன் என்றெல்லாம் பெருமைப்படறதும் இல்லை. அவங்களோட குறைகளை நிவர்த்தி செய்து களை எடுக்கிறேன். அதனால் பயிர் தனியாக தெரிகிறது, என்று அந்த நேர்காணலில் இயக்குனர் பாலா கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்