- Advertisement -
தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை செந்தில்குமாரி ஒரு நேர்காணலில் கூறியதாவது, சார்லி சாப்ளின் 2 படத்துல பிரபுதேவா கூட காது கேட்காத கேரக்டர்ல நான் நடித்திருப்பேன். ஒரு சீன்ல பைஃல் எங்கேன்னு அவர் என்கிட்டகேட்பார். நான் மயில் எங்கே இங்கே இருக்குது? என்று அதற்கு பதில் சொல்லி இருப்பேன். ஆனா அந்த சீன்ல கட்டிப்புடிப்பேன் காதை கடிப்பேன்னு என்கிட்ட அவர் சொல்லவே இல்லை. திடீர்னு அப்படி பண்ணிட்டார். நான் வலி தாங்க முடியாம கத்திட்டேன். என்ன சார் சொல்லாம பண்ணிட்டீங்கன்னு கேட்டேன். சொல்லாமல் பண்ணுதால தான் நீ அந்த கத்து கத்துனே? நிஜமான ரியாக்சன் கொடுத்தேன்னு சொன்னார் என்று நடிகை செந்தில்குமாரி கூறியிருக்கிறார்.





