நடிகை அனுஷ்கா, இளைஞர்களின் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர். தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து கொடிகட்டி பறந்த அனுஷ்கா, தமிழில் “ரெண்டு” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் “வேட்டைக்காரன்”, “சிங்கம்”, “தெய்வத்திருமகள்”, “சிங்கம் 2”, “இரண்டாம் உலகம்”, “லிங்கா” “என்னை அறிந்தால்”, “சிங்கம் 3” போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
“அருந்ததி”, “பாகுபலி” ஆகிய திரைப்படங்கள் அனுஷ்காவின் கெரியரில் மிக முக்கியமான திரைப்படங்களாக ஆகின. இதனிடையே இவர் “சைஸ் ஜீரோ” என்ற திரைப்படத்தில் உடல் பருமனான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடவில்லை.
இத்திரைப்படத்திற்காகவே அனுஷ்கா தனது உடலை பருமனாக்கினார். ஆனால் அதன் பின் அவரால் தனது உடல் எடையை பழைய மாதிரி குறைக்க முடியவில்லை. இதனால் அதற்கு அடுத்து அவர் நடித்த திரைப்படங்களில் அவர் இடம்பெறும் காட்சிகளில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது உடல் ஒல்லியாக இருப்பது போல் பார்வையாளர்களுக்கு காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அனுஷ்கா தற்போது “மிஸ் செட்டி மிஸ்டர் பொலிஷெட்டி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளிவரவுள்ளது. வழக்கம் போல் இத்திரைப்படத்திலும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுஷ்காவின் உடலை குறைத்திருக்கின்றனராம். ஆதலால் இத்திரைப்படத்தின் புரொமோஷனுக்கு வர அவர் தயங்குகிறாராம்.
அதாவது தனது உடல் எடை நிஜத்தில் அதிகமாக இருப்பதை ரசிகர்கள் பார்த்துவிட்டால், படத்தில் தன்னை ரசிகர்கள் ஒல்லியாக பார்க்கும்போது அவர்களை ஏமாற்றியது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் என்பதற்காகவே அவர் புரொமோஷனுக்கு வர மறுக்கிறாராம்.





