- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் ‘டோன்ட் டச் மீ’ என்று சொன்னாரா நடிகர் அஜீத்குமார்? தவளை தன்...

ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘டோன்ட் டச் மீ’ என்று சொன்னாரா நடிகர் அஜீத்குமார்? தவளை தன் வாயால் கெடும் என்பதை நிரூபித்து விட்ட நடிகர் யோகி பாபு – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் துணை நடிகராக சில படங்களில் முகம் காட்டிய பின், காமெடி நடிகராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவரது டோபா போன்ற சுருட்டை முடியும், கண் மூக்கு வாய் என சம்பந்தமே இல்லாத வித்யாசமான முக வடிவமும், அவரது நடை உடை பாவனைகளும் வித்யாசமாக இருந்ததால் அவருக்கு காமெடி காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் அவரை பன்னி மூஞ்சி வாயா என்றே சக நடிகர்கள் அழைக்கும்படி வசனங்களும் இருந்தன. காக்கிச்சட்டை படத்தில் கூட சிவகார்த்திகேயன், யோகிபாபுவை ஒரு காட்சியில் அப்படி அழைத்திருப்பார்.

சந்தானம், விவேக் போன்ற அழகான காமெடி நடிகர்களுக்கு மத்தியில் யோகிபாபு போன்ற தோற்றப் பொலிவு இல்லாத காமெடியன்களும் நடித்தனர். என்றாலும் கூட்டத்தோடு ஒருவராக நடித்த அவர், ஒரு கட்டத்தில் காமெடி நடிகராக முன்னணி நிலைக்கு வந்தார். அதற்கு காரணம் சூரி, சந்தானம் போ்ன்றவர்கள் கதாநாயகனாக மாறியதுதான்.

- Advertisement -

மண்டேலா போன்ற படத்தில், கதையின் நாயகனாக யோகிபாபு கேரக்டர் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதற்கு காரணம், அந்த கேரக்டரில் யார் நடித்திருந்தாலும் 90 மதிப்பெண் பெற முடியும் என்ற அளவுக்கு அந்த கதாபாத்திரம் இருந்தது. அந்த நல்ல கேரக்டரில் நடித்ததால் யோகிபாபுவுக்கு சிறப்பு கிடைத்ததே தவிர, அந்த கேரக்டரில் யோகிபாபு நடிப்பு சிறப்பு சேர்க்கவில்லை என்பதே இல்லை.

பரிச்சயமான முகம் என்பதாலேயே பல படங்களில் காமெடி பஞ்சம் தீர்க்க யோகிபாபு கமிட் செய்யப்பட்டார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி என இவர்களது காமெடிக்காக ஓடிய படங்கள் என சில படங்கள் இருப்பது போல், யோகி பாபு காமெடிக்காக ஓடியதாக ஒரு படமும் இல்லை என்பதே கசப்பான உண்மை.

- Advertisement -

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன், ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த போது ஒரு பிரபல நடிகரை தெரியாமல் நான் தொட்டு விட்டேன். அதற்கு அவர் டோண்ட் டச் மீ என்று கோபமாக என்னிடம் கூறினார் என்ற தகவலை, யோகிபாபுவே சொல்லி இருக்கிறார். அது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த நடிகர் யார் என்பதில் பல ஆண்டுகளாக சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

இதுகுறித்து சினிமா மூத்த பத்திரிகையாளர்கள் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி, அந்தணன் ஆகியோர் இன்று பேசிய ஒரு வீடியோவில், யோகிபாபுவை டோண்ட் டச் மீ என்று சொன்னது நடிகர் அஜீத்குமார் தான். இந்த விஷயத்தை யோகி பாபுதான் எங்களிடம் அழைத்து சொன்னார். நாகரிகம் கருதி அந்த தகவலை நாங்கள் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்று நடந்த உண்மையை இன்று போட்டு உடைத்து விட்டனர். இது அஜீத்குமார் ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவளை தன் வாயால் கெடும் என்பதை நிரூபித்து விட்டார் நடிகர் யோகிபாபு என்று அஜீத்குமார் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்