- Advertisement -
Homeபொழுதுபோக்குகதாசிரியர் கொடுத்து அனுப்பிய அவல் பொட்டலம், உடனடியாக எம்ஜிஆர் செய்த தரமான சம்பவம் -...

கதாசிரியர் கொடுத்து அனுப்பிய அவல் பொட்டலம், உடனடியாக எம்ஜிஆர் செய்த தரமான சம்பவம் – பொன்மனச் செம்மல் என்று தலைவரை சும்மாவா சொன்னாங்க?

- Advertisement -

எம்ஜிஆருடன் பணிசெய்த சினிமா கதாசிரியர் ஒருவர் தனது மகள் திருமணத்திற்கு எம்ஜிஆரிடம் உதவி கேட்க சத்யா ஸ்டுடியோவுக்கு சென்ற போது அங்கு நிறைய பேர் இருந்ததால் எம்ஜிஆரை நேரில் சந்திக்க முடியவில்லை. அப்போது கதாசிரியர் எம்ஜிஆரின் உதவியாளரிடம் துணியில் ஒரு பொட்டலத்தை கட்டி எம்.ஜி.ஆரிடம் கொடுக்குமாறு சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டுக்குள் நுழைந்தால் அங்கு எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையார் அமர்ந்திருக்கிறார். எனக்கு சத்யா ஸடுடியோவிலிருந்து போன் வந்தது. உங்கள் மகளின் திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் எம்ஜிஆர் கவனிக்குமாறு கூறி அனுப்பினார் என்று கூறியிருக்கிறார்.

எம்ஜிஆருக்கு கதாசிரியர் கொடுத்தனுப்பிய பொட்டத்தில் அவல் இருந்துள்ளது. ஒரு காலத்தில் கதாசிரியரும் எம்ஜிஆரும் நாடகத்தில் நடித்த போது எம்ஜிஆர் கண்ணனாகவும், கதாசிரியர் குசேலனாகவும் நடித்துள்ளனர். அதில் குசேலன் அவல் கொடுத்து தன் ஏழ்மை நிலைமையை கிருஷ்ணனுக்கு உணர்த்துவார். அதே போல் அவல் பொட்டலத்தைப் பார்த்ததும் கதாசிரியரின் வறுமை நிலைமையை புரிந்துக் கொண்ட எம்ஜிஆர் ராமாபுரத்துக்கு போன் செய்து ஜானகி அம்மையாரை தேவையான உதவிகளை செய்யுமாறு கதாசிரியர் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

சற்று முன்