- Advertisement -
நடிகர் ரன்பீர் கபூர் இராமபிரானாகவும் நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ள இராமாயணம் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவான பாடல்கள் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன. இதுகுறித்து ஏஆர் ரகுமான் கூறுகையில், இராமாயணம் பாடல்களுக்கு வரும் விமர்சனங்களை பார்க்க எனக்கு நேரம் இல்லை. கடினமாக உழைத்து உருவாக்கிய பாடல்களை தான் வெளியிடுகிறோம். நேற்று விமர்சித்தவர்கள் இன்று மன்னிப்பு கேட்கிறார்கள் என்று என் மகன் கூறுவான். நேர்மையாக உழைத்து உள்ளேன். மக்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன் என்று இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.





