- Advertisement -
நடிகர் ஜீவா நடிப்பில் இந்த ஆண்டில் பொங்கலுக்கு வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இயக்குனர் ரா வெங்கட் இயக்கத்தில் தகப்பன் என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜீவா 49 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜையில் நிமிஷா சஜயன் ஏஞ்சல் மரியா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். கேரளாவைச் சேர்ந்த முகமது முஸ்தபா இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.





