கடந்த 15ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படம் வெளியானது. இந்த 2 வாரங்களில் ஜெயிலர் 2 படம் 750 கோடி ரூபாய் வரை வசூலை எட்டியுள்ளது. தீபாவளி வரை மட்டுமின்றி தீபாவளிக்கு பிறகும் இந்த படம் தியேட்டர்களில் ஓடும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ஜெயிலர் 2 படத்தை ரூ. 115 கோடிக்கு டிஜிட்டல் உரிமம் வாங்கியுள்ளது. படம் வெளியான 28 நாட்களுக்கு பிறகு அது ஓடிடியில் வெளியாகும். அந்த வகையில் நவம்பர் 3வது வாரத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், 120 வருட தமிழ் சினிமா வரலாற்றில் ஜெயிலர் 2 படம்தான் நம்பர் 1 படம். 1000 கோடி ரூபாய் வசூலை தொட வாய்ப்புள்ளது. மேலும் ஓடிடி ரிலீஸ்சை தள்ளி வைக்கவும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.





