- Advertisement -
திமுக துணைப் பொதுச்செயலாளர் எம் பி கனிமொழி கூறியிருப்பதாவது, பஞ்ச் டயலாக் பேச மட்டுமே வாய் திறக்கிறார் முதல்வர். மற்ற நேரங்களில் எதற்கும் விளக்கம் தருவதில்லை. எதிர்க்கட்சியினரை கைது செய்வதில் இருக்கும் ஆர்வம் குற்றம் செய்பவர்களை கைது செய்வதில் இல்லை. திமுக ஆட்சியில் நிறைவு பெற்ற திட்டங்களை திறந்து வைத்து நான்கு மாதத்தில் செய்து முடித்ததாக தவெக அரசு ரீல்ஸ் போட்டு மக்களை ஏமாற்றுகிறது என்று எம்பி கனிமொழி குற்றம் சாட்டியிருக்கிறார்.





