- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகன் என்றால் கேவலமா? கொந்தளித்த இயக்குனர் பேரரசு - ஜால்ரா சத்தம் ஓவரா போச்சு,...

நடிகன் என்றால் கேவலமா? கொந்தளித்த இயக்குனர் பேரரசு – ஜால்ரா சத்தம் ஓவரா போச்சு, காது வலிக்குது ப்ரோ என கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பேரரசு கூறியதாவது, ஒரு நடிகன் அரசியலுக்கு வந்தால் இவ்வளவு கேள்வி கேக்குறீங்களே? கட்டப்பஞ்சாயத்து பண்றவங்க அரசியலுக்கு வந்தாங்கன்னா அவங்களை ஏதாவது கேள்வி கேட்டீங்களா? ஒரு ரவுடி வந்தா கேட்டீங்களா? நிலமோசடி பண்றவங்க வந்தா கேட்டீங்களா? அடுத்தவன் சொத்தை ஆட்டைய போடறவங்க வந்தா கேட்டடீங்களா? இவங்க எல்லாம் அரசியல்வாதியாக வர்றாங்க. கேட்க மாட்டீங்க? ஆனா நடிகர் வந்தா மட்டும் கேட்பீங்க. அப்போ இவங்களை விடவா சார் ஒரு நடிகன் உங்களுக்கு கேவலமாக போச்சு? மக்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை. நடிகர்கள் அரசியலுக்கு வரணுமா? இல்லையா என்று முடிவு பண்றது நீங்களோ நானோ இல்லை, மக்கள் என்று பேசியிருக்கிறார். ரொம்ப ஓவரா ஜால்ரா போடாதீங்க ப்ரோ, சத்தத்துல காது வலிக்குது என ரசிகர்கள் கமெண்ட் செய்து பேரரசுவை கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்