- Advertisement -
டைரக்டர்களாக ஹீரோக்களாக இளம் திறமையாளர்கள் பலர் தமிழ் சினிமாவில் களமிறங்கி இருப்பது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆரோக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விஜே சித்து டயங்கரம் என்ற படத்தை இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். மொத ராத்திரி படத்தை இயக்கிய ராஜா கருப்பசாமி மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை அவரே இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். அடுத்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் பிக்காசோ படத்துக்கு பிறகு தனது அடுத்த படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். டியூட் எல்ஐகே படங்களுக்கு பிறகு நடிகர் பிரதீப் ரங்கநாதன் பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கி அவரே ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.





