- Advertisement -
தூத்துக்குடி திமுக எம்பியும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கூறியிருப்பதாவது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருப்பதன் மூலம் இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாமே ஒப்பந்த பணிகள் தான் என்று சொல்ல வருகிறதா? அரசு போட்டித்தேர்வுகளில் குறைந்த பணியிடங்களையே ஒதுக்கி வரும் சூழலில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க தவெக முயற்சிப்பது இலட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவை சிதைக்கும் நடவடிக்கையாகும் என்று எம்பி கனிமொழி சிஎம் விஜய் மீதும் அவரது ஆட்சி நிர்வாகம் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறார்.





