- Advertisement -
விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் சீசன் 10 ஒளிபரப்பாகி வருகிறது. 50 நாட்களை கடந்த வாரமே இந்த நிகழ்ச்சி கடந்து விட்டது. இந்த நிலையில் வீட்டுக்குள் நடந்த ஒரு போட்டியில் சக போட்டியாளர் டிடிஎஃப் வாசனை பெண் போட்டியாளர் அக்சிதா தாவாவால் தாக்கியது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. இந்த நிலையில் அக்சிதாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் ரசிகர்கள் குறும்படங்களை வெளியிட்டு அக்சிதாவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸில் பெரிய பஞ்சாயத்து வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





