- Advertisement -
Homeபொழுதுபோக்குபழைய பாடல்கள் புதிய பாடல்கள் குறித்து ஒப்பிட்டு பேச மறுப்பது ஏன்? - கவிஞர்...

பழைய பாடல்கள் புதிய பாடல்கள் குறித்து ஒப்பிட்டு பேச மறுப்பது ஏன்? – கவிஞர் வாலி சொன்ன புதுவிளக்கம்!

- Advertisement -

ஒருமுறை நேர்காணலில் பேசிய கவிஞர் வாலி கூறியதாவது, என்னுடைய அன்புத்தம்பி வைரமுத்து ஒரு நேர்காணலில் பேசும் போது, கண்ணதாசனுக்கும் நான் பாட்டெழுதுவது பற்றி கவலையில்லை. வாலிக்கும் என் வருகையில் வருத்தமில்லை என்றார். நான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்ட போது, இது தமிழுக்குக் கிடைத்த பெருமை என்று என்னை வாழ்த்திக் கடிதம் எழுதிய முதல் நபரே தம்பி வைரமுத்துதான். ஏவிஎம் சரவணனோடு சேர்ந்து எனக்காக ஒரு பாராட்டு விழா நடத்தியதும் அவரே. இப்படி அனைவரது அன்பையும் பெற்றிருக்கும் நான், இன்றைய சினிமாப் பாடல்களைப் பற்றி அன்றைய சினிமாப் பாடல்களோடு ஒப்பிட்டு, ஏதேனும் கருத்துச் சொன்னால் என்னை வாழ்த்தும் உள்ளங்கள் வருத்தப்படுமோ என்று அஞ்சி மவுனம் காக்கிறேன் என்று வாலி கூறியிருக்கிறார்.

சற்று முன்