- Advertisement -
Homeபொழுதுபோக்கு300 ரூபா சம்பளத்துல எப்படி குடும்பம் நடத்த முடியும்? - 40 வயதில் திருமணம் செய்துக்கொண்ட...

300 ரூபா சம்பளத்துல எப்படி குடும்பம் நடத்த முடியும்? – 40 வயதில் திருமணம் செய்துக்கொண்ட நடிகர் முனீஷ்காந்த் வேதனை!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் முனீஷ்காந்த் கூறியதாவது, எனக்கு 40 வயசுல தான் கல்யாணம் ஆச்சு. அதுக்கு காரணம் நான் கோயம்பேடு மார்க்கெட்டில் தான் வேலை செஞ்சேன். ஒருநாள் சம்பளம் 300 ரூபா கிடைக்கும். அந்த சம்பளத்தை வைத்து என்னை பார்த்து கொள்வதற்கும் நான் சாப்பிடுவதற்குமே பெரிய போராட்டமா இருந்துச்சு. நம்ம பொழப்பே நாறிக்கிட்டு இருக்கு. இதுல எப்படி இன்னொருத்தரை வைத்து காப்பாற்றுவது என்று யோசித்தேன். சரின்னு ஒரு கட்டத்துல கல்யாணம் பண்ணலாம். 500 ரூபா புடவை வாங்கி தரலேன்னாலும் 100 ரூபா புடவை வாங்கி தரமுடியும். ரேஷன் அரிசியை போட்டு காப்பாற்றலாம் என்று எல்லாம் யோசித்து இருக்கிறேன். ஆனால் சினிமாவில் ஜெயிச்ச அப்புறம் தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன் என்று முனீஷ்காந்த் கூறியிருக்கிறார்.

சற்று முன்