- Advertisement -
தமிழ் சினிமாவில் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் கரகாட்டக்காரன். இந்த படத்தில் நடிகர் எஸ்எஸ் சந்திரனை தான் கவுண்டமணி நடித்த வேடத்தில் நடிக்க வைக்க கங்கை அமரன் முடிவு செய்திருந்தார். எஸ்எஸ் சந்திரன் – செந்தில் கூட்டணியில் காமெடி காட்சிகளை திட்டமிட்டிருந்தனர். இது நடிகர் ராமராஜனுக்கு தெரிய வந்ததும் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த காலகட்டத்தில் ராமராஜன் அதிமுகவில் இருந்தார். எஸ்எஸ் சந்திரன் திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இதனால் படப்பிடிப்பில் அரசியல் தொடர்பான பேச்சுகள் வந்தால் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் இது அரசியல் படம் கிடையாது என்றும் கங்கை அமரனிடம் ராமராஜன் கூறியுள்ளார். அதற்கு பிறகுதான் கவுண்டமணி நடித்திருக்கிறார்.





