விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர். அவர் தனது படிப்பை முடித்தப் பிறகு நிச்சயம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் பலரும் ஆச்சரியப்படும் வகையில் அவர் லைகா நிறுவனத்திற்காக ஒரு திரைப்படத்தை இயக்கப்போகிறார் என அறிவிப்பு வெளிவந்தது. இதற்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகர் பல பேட்டிகளில் தனது பேரன் விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.
அந்த வகையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ஜேசன் சஞ்சய் திரைப்படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று வதந்தி பரவியது.
அதாவது ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள திரைப்படத்திற்கு அஜித்தின் மேனேஜர்தான் பி ஆர் ஓ என்பதால் அஜித் அத்திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என வதந்தி பரவியது.
இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தை குறித்தான ஒரு முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது கவின், ஹரீஷ் கல்யாண், அதர்வா, இந்த மூவரில் ஒருவர்தான் ஹீரோ என கூறப்படுகிறது.
“டாடா” திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து கவினுக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. தற்போது கவின் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹரீஷ் கல்யாண் தற்போது ஒரு குறிப்பிடத்தகுந்த நடிகராக கோலிவுட்டில் வலம் வருகிறார். மேலும் அதர்வா சிறந்த நடிகர்தான் என்றாலும், சமீப காலமாக அவர் நடித்த எந்த திரைப்படமும் சரிவர ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





