- Advertisement -
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது, நான் பொறக்கும் போதே பணக்கார குடும்பத்தில் பிறக்கலே. நான் பொறக்கும் போது எங்க அப்பா நியூஸ் பேப்பர்ல தான் வேலை செஞ்சிட்டு இருந்தார். அப்ப எல்லாம் மூணு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் தான். என்னோட 10 வயசு வரைக்கும் அப்பாவோட படங்கள் ஹிட் ஆகலே. அவர் ஒரு வெற்றி பெற கஷ்டப்பட்டுக்கிட்டு தான் இருந்தார். அதுவரைக்கும் நாங்க ஸ்கூலுக்கு காசு இல்லாம நடந்து தான் போவோம். அதனால எனக்கு காசோட அருமை தெரியும். பணம் இன்னைக்கு இருக்கும் நாளைக்கு போகும். ஆனா மனுஷங்க தான் கூட இருப்பாங்கன்னு நம்புவேன் என்று வரலட்சுமி சரத்குமார் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





