- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் படத்திற்கு பிறகு பிரம்மாண்ட திரைப்படத்தில் களமிறங்கப் போகும் ஏ ஆர் முருகதாஸ்... அதுவும் ஹீரோ...

சிவகார்த்திகேயன் படத்திற்கு பிறகு பிரம்மாண்ட திரைப்படத்தில் களமிறங்கப் போகும் ஏ ஆர் முருகதாஸ்… அதுவும் ஹீரோ தேர்வுதான் இருப்பதிலேயே வெயிட்….

- Advertisement -

வாலி திரைப்படத்தின் போது, இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவியாளராக இருந்தவர் ஏ ஆர் முருகதாஸ். அப்போது அஜித்திடம் கதை கூறும் வாய்ப்பை பெற்ற அவர், தீனா படத்தின் கதையை கூற அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த திரைப்படம் உருவாக, அஜித்தின் திரையுலக வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு சென்றது.

ஒரு பக்கா கிளாசிக்கான திரைப்படத்தை கொடுத்து நம்மை கவர்ந்து இழுத்தார் ஏ ஆர் முருகதாஸ். அதிலும் அந்த திரைப்படத்தில் அஜித்தின் ஓப்பனிங் காட்சிகள், அவை தல என அழைப்பது என ஒரு ஃபேன் பாய் சம்பவம் போல் பண்ணி இருப்பார் முருகதாஸ். அஜித்தும், தனது ரவுடிக்கான கெட்டப்பை சரியாக செய்திருப்பார். இதன் காரணமாக அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.

- Advertisement -

இதன் பிறகு விஜயகாந்த் வைத்து ரமணா திரைப்படத்தை எடுத்தார் ஏ ஆர் முருகதாஸ். விஜயகாந்த்திற்கு, பெயர் சொல்லும் திரைப்படங்களில் ஒன்றாக ரமணா அமைந்தது. லஞ்ச ஊழல் எதிர்ப்புக்கு எதிராக குரல் கொடுத்த அந்த திரைப்படத்தின் கதை அம்சம் ரசிகர்களை மிகவும் சுண்டி இழுத்தது. குறிப்பாக விஜயகாந்த் ரமணா கதாபாத்திரத்திலேயே மக்கள் மனதில் நின்றார்.

பின்னர் தனது மூன்றாவது திரைப்படமாக கஜினி படத்தை எடுத்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றார் ஏ ஆர் முருகதாஸ். தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதை களத்தில் அந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த திரைப்படத்தையே அமீர் கானை வைத்து ஹிந்தியில் இயக்கி வெற்றி கண்டார் ஏ ஆர் முருகதாஸ்.

- Advertisement -

தொடர்ந்து ஏழாம் அறிவு துப்பாக்கி கத்தி என அவர் கை வைத்த படங்கள் அத்தனையுமே வெள்ளி விழா கண்டன. இப்படியான சமயத்தில் தன்னை தயாரிப்பாளராகவும் திரையுலகில் அறிமுகப்படுத்திக் கொண்டார் ஏ ஆர் முருகதாஸ். எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே, ரங்கூன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். இதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

ஸ்பைடர், சர்க்கார், தர்பார் என அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் தோல்வி அடைந்த சூழலில், தற்போது சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து படம் பண்ண இருக்கிறார். இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் பாலிவுட் செல்கிறாராம் ஏ ஆர் முருகதாஸ். சல்மான் கானை வைத்து அவர் படம் இயக்கத் திட்டமிட்டு இருக்கிறாராம். கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திரைப்படம் உருவாகிறது. 2025 ஆம் ஆண்டு ரம்சானில் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முருகதாஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்