- Advertisement -
சமீபத்தில் நடிகர் சூர்யா பங்கேற்ற ஒரு விழாவில் பேசியதாவது, கடந்த 29 வருஷங்களாக ரசிகர்களோட அன்பு கொஞ்சம் கூட குறையலே. 500 பேரோட ஆரம்பித்த நம்ம ரத்ததான சேவை இப்போ வருஷத்துக்கு 5000 பேர் ரத்த தானம் கொடுக்கிற அளவுக்கு வளர்ந்து இருக்கு. மருத்துவமனைகளும் அதிகாரிகளும் உதவி தேவைப்படும்போது நம்மை உரிமையோடு அழைக்கிறாங்க. அந்த அடையாளத்தை சம்பாதித்தது என்னோட ரசிகர்கள் தான். இது வெறும் கூட்டம் கிடையாது. என்னோட குடும்பம் என்று நடிகர் சூர்யா பெருமிதமாக அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





