- Advertisement -
அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் என பலருக்கும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நட்சத்திர சீனியர் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அடிக்கடி அச்சுறுத்தல் மிரட்டல்கள் வருகின்றன. மும்பையில் உள்ள அமிதாப்பச்சனின் ஜல்சா பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்துள்ளது. இந்த நிலையில் தன்னை காண திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்த நடிகர் அமிதாப் பச்சன், குண்டுகள் துளைக்க முடியாத கண்ணாடி கூண்டில் நின்று கையசைத்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.





