- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, நடிகர் ரியாஸ்கான் ரொம்ப பாவம், உடம்பை கஷ்டப்பட்டு ஏத்தி சிக்ஸ் பேக் வைத்திருந்தார். அவர் ரொம்ப படத்துல நடிச்சிருக்கிறார். ஆனால் எந்த படத்திலும் அவரோட கட்டுமஸ்தான உடம்பை திரையில் காட்டவே இல்லை. அவரோட உடம்பு தெரியணும்ன்னு அவருக்காக தான் வின்னர் படத்தில் வடிவேலு ரியாஸ்கான் காமெடி சீன்கள் வெச்சேன். நான் அப்பவே சொன்னேன். இந்த சீன்ல உங்க உடம்பு பற்றி கடைசி வரைக்கும் பேசுவாங்கன்னு. அதே மாதிரி ஆயிடுச்சு. இப்போது வரைக்கும் ரியாஸ்கான் சிக்ஸ்பேக் பற்றி ரசிகர்கள் பேசிட்டு தான் இருக்காங்க என்று இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார்.





