திருமண வாழ்க்கையில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக வாழும்போது பல்வேறு இன்ப துன்பங்களை கடந்து வாழ்கின்றனர். இதில் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தல், அனுசரித்தல், மரியாதை செய்தல், குறிப்பாக அவர்களுக்குள் புரிதல் இருந்தால் மட்டுமே அவர்களது வாழ்க்கை பயணம் இனிமையாக தொடரும்.
ஆனால் கலைத்துறை சார்ந்த நட்சத்திர தம்பதியர் வெகு எளிதில் திருமண பந்தத்தை முறித்துக்கொள்கின்றனர். இதற்கு அவர்களது வாழ்க்கை முறையும், சமுதாயத்தில் அவர்களுக்கான இமேஜூம் திருமண வாழ்க்கையை கடந்து நிற்கும் அவர்களது சுயநலமுமே பிரதானமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வரிசையில் நளினி – ராமராஜன் பிரசாந்த் – கிரஹலட்சுமி ஐஸ்வர்யரா ரஜினிகாந்த் – தனுஷ் ஜீவி பிரகாஷ்குமார் – சைந்தவி ஜெயம் ரவி – ஆர்த்தி என்ற வரிசையில் இப்போது ஏஆர் ரகுமான் – சாயிரா பானு தம்பதியும் பிரிவு என்பதை அறிவித்துள்ளனர். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதுவும் 1995ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்ட ஏஆர் ரகுமான் – சாயிரா பானு தம்பதியர் அடுத்த ஆண்டில் 30வது திருமண நாளை கொண்டாட உள்ளனர். 3 பிள்ளைகள் உள்ள நிலையில் அதில் மகள் கதீஜாவுக்கு திருமணமாகி விட்டது. மகள் ரஹிமா, மகன் அமீன் ஆகியோர் திருமணம் செய்ய வேண்டிய வயதில் உள்ளனர். இப்போது இப்படி ஒரு பிரிவு அறிவிப்பை சாயிரா பானு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏஆர் ரகுமான் இதுகுறித்து வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில், அடுத்த ஆண்டில் எங்களது 30வது திருமண நாளை எட்டுவோம், அந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம் என்று நான் நம்பினேன். ஆனால் எல்லாமே கண்ணுக்கு தெரியாத முடிவாக தான் வாழ்க்கையில் இருக்கிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்க கூடும்.
இந்த சிதைவில் இன்னும் சில துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட அதற்கான அர்த்தத்தை தேடுகிறோம். நண்பர்களுக்கு, இந்த பலவீனமான அத்தியாயத்தை கடந்து செல்லும்போது உங்களது அன்புக்கும் எங்களது தனியுரிமைக்கும் மதிப்பளித்ததற்கு நன்றி என்று கூறியிருக்கிறார். இதற்கு அவரது மகள் கதீஜா கும்பிடு போட்டு தனது ரியாக்சனை காட்டியிருக்கிறார்.





