- Advertisement -
திரைப்பட இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியதாவது, எங்க அப்பா பேரு ராமசாமி. எங்க ஊர் மேல இருக்கற வெள்ளக்காரன் டீ எஸ்டேட்டுல கங்காணியாக எங்க அப்பா வேலை செஞ்சார். அப்பா தான் அங்கு எல்லாமே. யார் எந்த வேலை செய்யணும்? எத்தனை பேர் செய்யனும்? என்று பிரித்து விடுவார். அப்பா ரொம்ப வருஷமா வேலை செஞ்சார. வெள்ளைக்காரன் அப்பாவை கிறிஸ்டியனா மதம் மாறச் சொல்லி டேனியல் ராமசாமின்னு பேர் வச்சாங்க. வெள்ளக்காரன் சொந்த நாட்டுக்கு போகும் போது அப்பாவுக்கு 25 ஏக்கர் எழுதிக் கொடுத்துட்டு போனான். அப்பா கிறிஸ்டியனா தான் வாழ்ந்தார். கர்த்தர் என்னை கூப்பிடுகிறார் என்று சொல்லிட்டு தான் இறந்து போனார். ஆனால் நாங்க கிறிஸ்டியனா இல்லை. இந்துவா பிறந்து இந்துவா வளர்ந்தோம் என்று கூறியிருக்கிறார்.





