- Advertisement -
Homeபொழுதுபோக்குஆதிக் ரவிச்சந்திரன் அழைத்து வந்த மும்பை தயாரிப்பாளர் - நோ சொன்ன நடிகர் அஜீத்குமார் -...

ஆதிக் ரவிச்சந்திரன் அழைத்து வந்த மும்பை தயாரிப்பாளர் – நோ சொன்ன நடிகர் அஜீத்குமார் – உச்சகட்ட விரக்தியில் ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் குட்பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்துக்கு பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடிகர் அஜித்குமார் தனது அடுத்த 64வது படத்தில் நடிக்காமல் இருந்து வருகிறார். துபாய் மலேசியா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கார் ரேஸில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார்.

இப்போது அஜீத்குமார் பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கார் ரேஸில் கலந்துக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் இருந்து கார் ரேஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்கிறேன். இப்போது ஐரோப்பாவில் இருக்கிறேன். கார் ரேஸ் தொடரும் அடுத்த ஆண்டுக்கான பயணத் திட்டம் ரெடி என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவரது இந்த பேச்சு அஜீத் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவர் சினிமாவில் நடித்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு நடிக்கவில்லை. அவரை வைத்து படம் இயக்குவதற்காக ஆதிக் ரவிச்சந்திரன் சிறுத்தை சிவா ஏஎல் விஜய் உள்ளிட்ட பல இயக்குனர்கள் தயாராக இருந்தும் அவர் அடுத்த படத்தில் நடிக்க ஆர்வமின்றி இருக்கிறார்.

மேலும் அஜீத்குமார் நடிக்க 185 கோடி சம்பளம் கேட்பதால் அவரது படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வராத நிலையும் உள்ளது. அஜீத்துக்கு போட்டியாளராக கருதப்பட்ட நடிகர் விஜய் இப்போது அரசியலுக்கு போய்விட்டார். தமிழக முதல்வர் ஆகிவிட்டார். அதனால் அஜீத்தின் தற்போதைய மார்க்கெட்டுக்கு ஏற்ற சம்பளம் இது அல்ல. மிகவும் அதிகம் என்று தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தனது சம்பளத்தை குறைக்கவும் மறுப்பதால் அடுத்த படம் உருவாவதில் இழுபறி நீடிக்கிறது. மேலும் படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு கார் ரேஸில் மட்டுமே அவர் முழு கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மும்பையில் இருந்து ஒரு தயாரிப்பாளரை அழைத்து வந்து அஜீத்குமாரிடம் பேச வைத்திருக்கிறார். அவரிடம் பேசிய அஜீத்குமார் முடிவில், அந்த தயாரிப்பாளரின் தயாரிப்பில் நடிக்க முடியாது என்று நோ சொல்லியிருக்கிறார்.

இது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அஜீத்குமார் 2 படங்களில் நடித்திருக்கலாம். ஒரு படத்துக்கு 100 கோடி சம்பளம் என்றால் கூட 200 கோடி ரூபாய் சம்பளமாக வந்திருக்கும். ஆனால் சினிமாவை தவிர்த்துவிட்டு கார் ரேஸில் மட்டுமே அஜீத்குமார் அதிக ஆர்வமும் கவனமும் செலுத்தி வருவது அவரது ரசிகர்களுக்கு விரக்தியை தந்துள்ளது. இயக்குனர்களுக்கும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்